முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொய்யான வாக்குறுதியால் வெல்வதை விட நான் தோற்பேன்: ரிஷி சுனாக் பேட்டி

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2022      உலகம்
Rishi-Sunak 2022-08-12

Source: provided

லண்டன் : பொய்யான வாக்குறுதியால் வெல்வதைவிட தான் தோற்பேன் என்று ரிஷி சுனாக் தெரிவித்துள்ளார்.  

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் இந்திய வம்சாவளி ரிஷி சுனாக் உள்ளார். இவர் பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில், 

நான் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவிக்கான (பிரதமர் பதவி) போட்டியில், பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெறுவதைக் காட்டிலும் தோற்பேன். மிகக் கடினமான குளிர்காலத்தில் இந்த நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு உதவ வேண்டும் என்று நான் உறுதியாக இருக்கிறேன். எனது முதல் விருப்பம் எப்போதும் மக்களிடம் இருந்து பணத்தை எடுக்கக் கூடாது என்பதுதான். 

வாழ்வாதார நெருக்கடியால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு உதவுவதில் நான் உறுதியுடன் உள்ளேன். குளிர் காலத்தில் கூடுதல் உதவிகள் வழங்குவதற்கான தார்மீகப்பொறுப்பை உணர்கிறேன்.

கோடிக்கணக்கான மக்கள் விலைவாசி உயர்வால் கவலைப்படுவதை அறிந்துள்ளேன். நான் பிரதமர் பதவிக்கு வந்தால் மிகவும் ஆதரவு தேவைப்படுகிற குடும்பங்களுக்கு உதவுவதில் முன்னேறுவேன் என்பதுதான் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து