முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் மீண்டும் அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு : புதிதாக 16,561 பேருக்கு தொற்று

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2022      இந்தியா
India-Corona 2022 01 12

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 16 ஆயிரத்து 561 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 16,299 ஆக இருந்த கொரோனா பாதிப்பு, நேற்று 16,561 ஆக அதிகரித்தது.

ஒரே நாளில் 18,053 பேர் குணமடைந்ததால் இந்தியாவில் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 4,35,73,094 ஆனது.நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,25,076 லிருந்து 1,23,535 ஆக குறைந்துள்ளது.

கொரோனா தொற்றால் நேற்று முன்தினம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 ஆக பதிவானது. இந்தநிலையில், நேற்று ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 5 லட்சத்து 26 ஆயிரத்து 928 பேர் இறந்துள்ளனர்.

நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 2,07,47,19,034 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 17,72,441 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் இந்த தகவல்களை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து