முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் அதிக கட்டணம் வசூலித்த 60 ஆம்னி பேருந்துகள் மீது வழக்கு பதிவு

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Omni-bus 2022-08-13

சென்னையில் அதிக கட்டணம் வசூலித்த 60 ஆம்னி பஸ்கள் மீது வழக்கு பதவு செய்யப்பட்டுள்ளது. 

தொடர் விடுமுறையை பயன்படுத்தி தனியார் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் வழக்கம் போல கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி விட்டனர். பொதுமக்களின் புகாரின் பேரில் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் 5 குழுவாக சோதனையில் ஈடுபட்டனர். இணை ஆணையர் ரவிச்சந்திரன் முன்னிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 259 ஆம்னி பஸ்களில் கூடுதல் கடடணம் வசூலித்தார்களா என பயணிகளிடம் விசாரிக்கப்பட்டது.

அதில் 21 ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தது தெரியவந்தது. வழக்கமாக வசூலித்த கட்டணத்தை விட கூடுதலாக வாங்கிய தொகையை பயணிகளுக்கு அதிகாரிகள் உடனடியாக திருப்பி கொடுக்க ஏற்பாடு செய்தனர். அந்த வகையில் 11,300 ரூபாய் பயணிகளுக்கு திருப்பி கொடுக்கப்பட்டது. மேலும் வரி கட்டாத காரணத்தால் ஒரு ஆம்னி பஸ் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த ஆய்வின் போது 60 ஆம்னி பஸ்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்டது தெரிய வந்தது. தகுதி சான்று இல்லாமல் இயக்கியது, அதிக கட்டணம் வசூலித்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. போக்குவரத்து துறையின் விதியை மீறி செயல்பட்டதாக ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 500 அபராதமாக வசூலிக்கப்பட்டன.

சென்னையில் வடக்கு மண்டலத்தில் மட்டும் நடந்த சோதனையில் இத்தனை ஆம்னி பஸ்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதே போல தெற்கு மண்டலத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை தொடர்ந்து வருகிற 16-ந் தேதி காலை வரையில் நடைபெறும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து