முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசியக்கொடியை முகப்பு படமாக மாற்றினார் டோனி

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
Tony 2022 01 13

Source: provided

நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை கொண்டாடும் வகையில் 'சுதந்திர தின அமிர்த பெருவிழா' என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக 'இல்லம் தோறும் தேசிய கொடி' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. இதன்படி, நேற்று முதல் சுதந்திர தினமான 15-ந்தேதி வரையிலான 3 நாட்கள் தங்கள் வீடுகளில் பொதுமக்கள் மூவர்ண கொடியை பட்டொளி வீசி பறக்கச் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, கடந்த 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அனைத்து இந்தியர்களும் தங்களுடைய சமூக ஊடக கணக்குகளில் முகப்பு படமாக தேசிய கொடியை வைக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்து இருந்தார். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகப்பு படத்தை மாற்றியுள்ளார் .அதன்படி தேசியக்கொடியை முகப்பு படமாக அவர் மாற்றியுள்ளார்.டோனி சமுக வலைதளத்தில் அதிகம் ஆக்டிவாக இருக்கமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

_______________

இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தும்: ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்

20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் 28-ந்தேதி துபாயில் லீக் சுற்றில் மோதுகின்றன. அதன் பிறகு சூப்பர்-4 சுற்றிலும் இவ்விரு அணிகளும் சந்திக்க உள்ளன. கணிப்புபடி எல்லாம் சரியாக நகர்ந்தால் இறுதிப்போட்டியிலும் இந்தியா-பாகிஸ்தான் பலப்பரீட்சை நடத்த வேண்டி வரும். இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரை இந்தியா வெல்லும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஐசிசி நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்த ரிக்கி பாண்டிங் கூறுகையில், இந்த ஆசிய கோப்பை தொடரை இந்திய அணி வெல்லும் என கூறினார். மேலும், ஆசிய கோப்பையை வெல்லும் வடிவிலான அணி கட்டமைப்பு இந்திய அணிக்கு உள்ளது என்றும், ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தும் எனவும் கூறியுள்ளார்.

_______________

2-வது டி-20 போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி

நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இரு அணிகள் மோதிய 2வது டி20 ஓவர் போட்டி கிங்ஸ்டனில் நடந்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. கிளென் பிலிப்ஸ் அதிரடியாக ஆடினார். அவர் 41 பந்தில் 76 ரன்னும், டேரில் மிட்செல் 20 பந்தில் 48 ரன்னும் குவித்தனர். கான்வே 34 பந்தில் 42 ரன்னும் எடுத்தனர். 

இதையடுத்து, 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் அந்த அணி 90 ரன் வித்தியாசத்தில் தோற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து 2-0 என கைப்பற்றியுள்ளது. 3-வது 20 ஓவர் போட்டி நாளை நடக்கிறது.

_______________

ஒரே ஓவரில் 24 ரன்கள்: அதிரடி காட்டிய புஜாரா

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் விளையாடி வருபவர் புஜாரா. 34 வயதானது இவர் ராகுல் டிராவிட்டுக்கு பிறகு பொறுமையாக விளையாடக்கூடிய வீரர். இவர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் போட்டிகளில் சசெக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஒருநாள் போட்டியில் விளையாடிய இவர் அதிரடியாக விளையாடி சதம் அடித்து அசத்தியுள்ளார். 79 பந்தில் 107 ரன்கள் குவித்துள்ளார். 

அந்த போட்டியின் 45-வது ஓவரில் 22 ரன்களை குவித்துள்ளார். 50 ரன்களை எடுத்த பிறகு 100 ரன்களை 22 பந்தில் அடித்துள்ளார். ஒரே ஒவரில் 22 ரன்கள் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.டெஸ்டில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த புஜாரா வெள்ளை பந்து போட்டிகளில் விளையாடுவதில்லை. இவர் கடைசியாக 2014-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார். இதுவரை 5 ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

_______________

அடுத்த ஆண்டு மகளிர் ஐபிஎல். தொடங்க பி.சி.சி.ஐ. திட்டம் ?

உலக அளவில் ஃப்ரான்சைஸ் லீக் தொடர்கள் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ், இங்கிலாந்தில் தி ஹண்ட்ரட், மேற்கிந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக், இலங்கையில் லங்கா பிரீமியர் லீக், பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் நடத்தப்பட்டு வருகிறது. வெகு விரைவில் தென்னாப்பிரிக்கா மற்றும் அமீரகத்தில் இதே போல டி20 லீக் தொடர் நடத்தப்பட உள்ளது. இதில் மகளிர் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக பிக் பேஷ் மற்றும் தி ஹண்ட்ரட் லீகில் பிரத்யேக தொடர்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆடவர்களுக்கு நடத்தப்பட்டு வரும் நிலையில், மகளிருக்கும் இதே போன்ற லீக் வேண்டுமென்ற குரல் ஒலித்து வந்தது. அதற்கு ஏற்ற வகையில் உள்நாட்டு மகளிர் கிரிக்கெட் காலண்டரில் பிசிசிஐ மாற்றம் கொண்டுவர முடிவு செய்துள்ளதாம். அதன்படி பார்த்தால் எதிர்வரும் 2023 மார்ச் மாதம் மகளிர் ஐபிஎல் தொடர் நடத்த சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிருக்கான ஐபிஎல் தொடர் மிகவும் பிரம்மாண்ட வெற்றியை பெறும் என தான் நம்புவதாகவும். அடுத்த ஆண்டு அதனை தொடங்க சரியாக இருக்கும் எனவும் பிசிசிஐ தலைவர் கங்குலி கடந்த பிப்ரவரியில் தெரிவித்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து