முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வில் இருந்து டாக்டர் சரவணன் நீக்கம் அண்ணாமலை அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Annamalai 2022 05 06

Source: provided

சென்னை, ஆக. 15-  பா.ஜ.க.வில் இருந்து டாக்டர் சரவணன் நீக்கப்படுவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். 

காஷ்மீரில் வீரமரணமடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு சென்ற தமிழக நிதி அமைச்சரின் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக  மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் டாக்டர் சரவணன் நேற்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் வீட்டிற்கு நேரில் சென்று தனது வருத்தத்தை தெரிவித்தார். 

இந்த நிலையில் மதுரை மாவட்ட பா.ஜ.க. தலைவராக இருந்த டாக்டர் சரவணன் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறியதுடன் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சரவணன் நடந்து கொண்டதாகவும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சரவணனை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, நேற்று முன்தினம் நிதியமைச்சரை சந்தித்து விட்டு  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சரவணன், பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து