முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காயத்தால் வாஷிங்டன் சுந்தர் விலகல்: ஜிம்பாப்வே தொடருக்கான அணியில் ஷாபாஸ் அகமது

செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
Shahbaz-Ahmed 2022-08-16

Source: provided

மும்பை : காயம் காரணமாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக இந்திய அணியில் ஷாபாஸ் அகமது இணைந்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த...

22 வயதான இளம் வீரர்தான் வாஷிங்டன் சுந்தர். தமிழகத்தை சேர்ந்தவர். வலது கை சுழற்பந்து வீச்சாளர் மற்றும் இடது கை பேட்ஸ்மேனான இவர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கடந்த 2017 வாக்கில் அறிமுகமானார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி உள்ளார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் டி20 போட்டிகளில் விளையாடியது தான் அதிகம். மொத்தம் 31 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

ஒருநாள் தொடரில்... 

இந்நிலையில், இவர் வரும் 18 முதல் 22 வரையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி இருந்தார். இவர் இங்கிலாந்து நாட்டில் அண்மையில் நடைபெற்ற கவுன்டி கிரிக்கெட் தொடரின் போட்டி ஒன்றில் லங்காஷயர் (Lancashire) அணிக்காக விளையாடி இருந்தார். அப்போது அவருக்கு தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டது. அதனால் ஜிம்பாப்வே தொடரை வாஷி மிஸ் செய்துள்ளார்.

கொரோனா தொற்று...

முன்னதாக, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான தொடரை தசைப் பிடிப்பு காரணமாக வாஷி மிஸ் செய்தார். கொரோனா தொற்று காரணமாக தென்னாப்பிரிக்க தொடரையும் மிஸ் செய்தார். கடந்த ஐபிஎல் சீசனிலும் அவர் காயத்தால் அவதிப்பட்டார். 

ஷாபாஸ் மாற்று வீரர்...

வாஷிங்டன் சுந்தருக்கு மாற்றாக கடந்த ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடிய ஷாபாஸ் அகமது இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தால் அறிமுக வீரராக களம் இறங்குவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து