முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியை வாங்க எலான் மஸ்க் முடிவு

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2022      உலகம்
Elon-Musk 2022-08-17

Source: provided

வாஷிங்டன் : நான் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப் போகிறேன் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார் 

உலக பெரும் பணக்காரராரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை சமீபத்தில் கைவிட்டார். டுவிட்டரில் உள்ள போலி கணக்கு விவரங்கள் குறித்த தரவுகள் இல்லை என கூறி இந்த ஒப்பந்தத்தை மஸ்க் கைவிட்டார். 

இந்த நிலையில் எலான் மஸ்க் இங்கிலாந்தின் கால்பந்து கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப் போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தெளிவாகச் சொல்வதானால், நான் குடியரசுக் கட்சியின் இடது பாதியையும், ஜனநாயகக் கட்சியின் வலது பாதியையும் ஆதரிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிவை தொடர்ந்து சில நிமிடங்களிலே மற்றொரு பதிவில் நான் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப்போகிறேன் என அறிவித்துள்ளார். இந்த பதிவு பல லட்சம் லைக்குகளை குவித்து வருகிறது.

மான்செஸ்டர் யுனைடெட் உலகின் தலைசிறந்த கால்பந்து கிளப் அணிகளில் ஒன்றாகும். இந்த அணியில் கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து