முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜோபைடனின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2022      உலகம்
Jill-Biden 2022-08-17

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது. 

அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பிடனுக்கு கொரோனாவுக்கான லேசான அறிகுறிகள் கானப்பட்டது. இதையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அவரது கணவவரும் அதிபருமான ஜோபைடன் இரண்டாவது முறையாக வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, தற்போது அவரின் மனைவிக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் தற்போது உரிய சிகிச்சையை எடுத்தவாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து