முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7 தைவான் அதிகாரிகளுக்கு சீனா பொருளாதார தடை

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2022      உலகம்
China 2022 08 17

Source: provided

பெய்ஜிங் : அமெரிக்க எம்.பி.க்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தைவான் அதிகாரிகள் 7 பேருக்கு சீனா பொருளாதார தடை விதித்துள்ளது. 

தைவானுக்கு அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி சென்றதால் சீனா கடும் கோபமடைந்தது. அதை தொடர்ந்து தைவானை எச்சரிக்கும் விதமாக சீன ராணுவம் தைவானை சுற்றி வளைத்து கடல் மற்றும் வான்வெளியில் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது.

இதனால் ஏற்பட்ட பதற்றம் தணிவதற்குள் அமெரிக்க எம்.பி.க்கள் 5 பேர் 2 நாள் பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தைவானுக்கு சென்றனர். இது சீனாவை மேலும் ஆத்திரமடைய செய்தது. 

இதன் காரணமாக சீன ராணுவம் மீண்டும் தைவானை சுற்றிலும் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க எம்.பி.க்களின் வருகைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தைவானின் மூத்த அதிகாரிகள் 7 பேருக்கு சீனா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

தைவானின் சுதந்திரத்தை தீவிரமாக ஆதரித்து வரும் அமெரிக்காவுக்கான தைவான் பிரதிநிதி ஹசியாவ் பி கிம், தைவான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் பொதுச் செயலாளர் வெலிங்டன் கூ, தைவான் துணை சபாநாயகர் சாய் சி சாங் உள்பட 7 பேர் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படுவதாக சீனா அறிவித்துள்ளது. முன்னதாக நான்சி பெலோசியின் வருகையை தொடர்ந்து தைவானின் வணிக நிறுவனங்கள் மீது சீனா பொருளாதார தடைகளை விதித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து