முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் ஒருநாள் போட்டி: மே.இ. தீவுகள் வெற்றி

வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
one-day-match--2022-08-18

Source: provided

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 45.2 ஓவர்களில் 190 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார். அகேல் ஹுசைன், அல்ஸாரி ஜோசப் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். 

மேற்கிந்தியத் தீவுகள் அணி, 39 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷமர் புரூக்ஸ் 79 ரன்கள் எடுத்தார்.  மேற்கிந்தியத் தீவுகள் அணி, 2014-க்குப் பிறகு நியூசிலாந்து அணியை ஒருநாள் கிரிக்கெட்டில் தோற்கடித்துள்ளது. மேலும் கடந்த 10 ஒருநாள் ஆட்டங்களில் மே.இ. தீவுகள் அணி முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளது. மார்ச் 2020-க்குப் பிறகு முதல்முறையாக ஒருநாள் ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் நியூசிலாந்து அணி இழந்துள்ளது.  2-வது ஆட்டம் இதே மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.

___________

பீனிக்ஸ் பிரக்ஞானந்தா: 

3-வது சுற்றில் வெற்றி

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அடுத்ததாக அமெரிக்காவின் மியாமியில் நடைபெறும் எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ கோப்பைப் போட்டியில் விளையாடி வருகிறார் இந்தியாவின் பிரபல செஸ் வீரர் பிரக்ஞானந்தா. முதல் சுற்றில் உலகின் நெ.1 ஜூனியர் வீரர் அலிரேஸா ஃபிரோஜாவை 2.5-1.5 என வீழ்த்தினார் பிரக்ஞானந்தா 2-வது சுற்றில் பிரபல வீரர் அனிஷ் கிரியை 2.5-1.5 என வீழ்த்தினார். 3-வது சுற்றில் அமெரிக்காவின் பிரபல வீரரான ஹான்ஸ் நீமன்னை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா. கார்ல்சனுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று பிறகு தோற்ற நீமன், பிரக்ஞானந்தாவுக்கு எதிராகவும் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றார். 

அடுத்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று சமன் செய்தார். 3-வது ஆட்டம் டிரா ஆனது. 4-வது ஆட்டத்தில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்று  2.5-1.5 என ஹான்ஸ் நீமன்னை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.உலக சாம்பியன் கார்ல்சன்  2.5-1.5 என பிரபல வீரர் லெவோன் ஆரோனியனை வீழ்த்தினார். 8 வீரர்கள் விளையாடும் இந்தப் போட்டியில் 9 புள்ளிகளுடன் கார்ல்சனுடன் இணைந்து முதல் இடத்தில் உள்ளார் பிரக்ஞானந்தா. 4-வது சுற்றில் லெவோன் ஆரோனியனை அவர் எதிர்கொள்கிறார். 

____________

இன்ஸ்டாகிராமில் கணவர் பெயரை 

பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால். ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இந்திய அணியின் முக்கிய வீரராக தற்போது திகழ்கிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பிரபல நடன இயக்குனர் தனஸ்ரீ வர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தனஸ்ரீ வர்மா சமூக வலைத்தளங்களில் மிகவும் 'ஆக்ட்டிவாக' இருப்பவர். இவர் பதிவிடும் நடன வீடியோக்களை பார்ப்பதற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 50 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடருகின்றனர்.

திருமணத்திற்கு பிறகு இன்ஸ்டாகிராமில் 'தனஸ்ரீ சஹால்' என்ற பெயருடன் தனஸ்ரீ தனது சமூக வலைத்தள கணக்கை நிர்வகித்து வந்தார். இந்த நிலையில் அவர் தற்போது தனது கணவரின் பெயரை நீக்கி மீண்டும் தனஸ்ரீ வர்மா என மாற்றியுள்ளார். இதை தொடர்ந்து சஹால் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "புதிய வாழ்க்கை தயாராகிறது" என பதிவிட்டு இருந்தார். பிரபல நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவை பிரியும் முன்பு சமூக வலைதள கணக்குகளில் இருந்து அகினேனியை நீக்கினார். இதனால் சஹால்- தனஸ்ரீ வர்மா இருவரும் திருமண வாழ்வில் இருந்து பிரிகிறார்களா என ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

___________

சென்னை ஓபன் டென்னிஸில்

முன்னணி வீராங்கனைகள்..!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் வரும் செப்டம்பர் 12 முதல் 18 வரை சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு வீராங்கனைகளின் பட்டியலை மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி ஒற்றையர் பிரிவில் மொத்தம் 32 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 

உலகத் தரவரிசையில் 29-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் அலிசன் ரிஸ்க், பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் (33-வது இடம்), பிரான்ஸின் கரோலின் கார்சியா (35), ரஷ்யாவின் வார்வரா கிராச்சேவா (60), போலந்தின் மேக்டா லினெட் (70), சுவீடனின் ரெபேக்கா பீட்டர்சன் (87), ஜெர்மனியின் தட்ஜானா மரியா (93), சீனாவின் கியாங் வாங் (103), பிரான்ஸின் க்ளோ பாகுட் (111), கனடாவின் ரெபேக்கா மரினோ (113), ஜப்பானின் மோயுகா உச்சிமா (131), ரஷ்யாவின் ஒசானா செலக்மேதவா (145), அனா பிளின்கோவா (151), அனஸ்டசியா கஸநோவா (156), செக்குடியரசின் லிண்டா ஃப்ருஹ்விர்டோவா (157), போலந்தின் கதர்சினா காவா (160), பெல்ஜியத்தின் யானினா விக்மேயர் (162), அன்டோராவின் விக்டோரியா ஜிமினெஸ் (165), நெதர்லாந்தின் அரியன்னே ஹார்டோனோ (166), சுவிட்சர்லாந்தின் ஜோன் ஜுகர் (167), பிரிட்டனின் கேட்டி ஸ்வான் (177) ஆகியோர் சென்னை ஓபனில் களமிறங்குகின்றனர்.

_______________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து