முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புரட்டாசி மாதப்பிறப்பு: திருப்பதிக்கு தமிழக பக்தர்கள் பாதயாத்திரை

ஞாயிற்றுக்கிழமை, 18 செப்டம்பர் 2022      ஆன்மிகம்
thirupathi 2022 09 18

Source: provided

வேலூர் : புரட்டாசி மாதம் நேற்று பிறந்ததையொட்டி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து பக்தா்கள் திருப்பதிக்கு பாதயாத்திரையாக செல்வது அதிகரித்துள்ளது.

புரட்டாசி மாதமானது நேற்று பிறந்தது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் திருப்பதி வெங்டேசப் பெருமாளை தரிசிக்க தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பக்தா்கள் திருப்பதி செல்வது வழக்கம்.

அதிலும், புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் திருப்பதியில் பெருமளவில் பக்தா்கள் கூட்டம் அலைமோதும்.  இதனிடையே, புரட்டாசி மாதம் பிறந்து விட்டாலே வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் காட்பாடி வழியாக திருப்பதிக்கு பாதயாத்திரையாக செல்வதுண்டு. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று தடுப்பு ஊரடங்கு காரணமாக திருப்பதிக்கு பாதயாத்திரை செல்ல முடியாத சூழல் நிலவியது.  

கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு திருப்பதிக்கு பாதயாத்திரையாக செல்ல பக்தா்களிடையே ஆா்வம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், புரட்டாசி மாத பிறப்பதையொட்டி வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் தங்கள் குடும்பத்தினருடன் பெருமாளுக்கு விரதமிருந்து திருப்பதி நோக்கி பாத யாத்திரை செல்ல தொடங்கினர். 

இதனால், வேலூா் - திருப்பதி சாலையில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களை அதிகளவில் காணமுடிந்தது. அவா்கள் பக்திப் பரவசத்துடன் ‘கோவிந்தா, கோவிந்தா என பெருமாளின் நாமத்தை உச்சரித்தபடியே பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து