முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓட்டுனர்களின்றி தானாக இயங்கும் மெட்ரோ ரயில்கள் வடிவமைப்பு: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2022      தமிழகம்
Metro-train 2022 09 22

ஓட்டுனர்களின்றி மெட்ரோ ரயில்கள் தானாக இயங்கும் வகையில் ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. 

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. சென்னையில் 2 வழித்தடங்களில் 55 கி.மீ. தூரத்துக்கு தினமும் காலை 5 மணியிலிருந்து இரவு 11 மணி வரை 42 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 15 பெண்கள் உள்பட 180 டிரைவர்கள் பணியாற்றி வருகின்றனர். 

இதைத் தொடர்ந்து 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கான திட்டப் பணிகள் அனைத்தும் வருகின்ற 2026-ம் ஆண்டிற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் புதிதாக அமையவுள்ள மூன்று வழித்தடங்களிலும் ஓட்டுனர்கள் இல்லாமல் மெட்ரோ ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் ஓட்டுநர் அல்லாது தானியங்கி முறையில் ரயிலை இயக்கும் வகையில் ரயில் பெட்டிகளை தயாரிப்பு செய்ய மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து