முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடை பயணத்திற்கு இன்று ஓய்வு: டெல்லி செல்கிறார் ராகுல் காந்தி

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2022      இந்தியா
Rahul 2022-09-22

Source: provided

திருவனந்தபுரம்: நடை பயணத்திற்கு இன்று ஒருநாள் ஓய்வு கொடுத்து டெல்லி செல்கிறார் ராகுல் காந்தி. அங்கு இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி தொடங்கிய இந்த பாதயாத்திரை 11-ந் தேதி முதல் கேரளாவில் நடந்து வருகிறது. இதில் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று வருகிறார்கள்.

எர்ணாகுளம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பாதயாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி நேற்று முன்தினம் இரவு தேசம் பகுதியில் நிறைவு செய்தார். நேற்று அவரது 15-வது நாள் பாதயாத்திரை தேசம் பகுதியில் இருந்து அதிகாலை 6.30 மணிக்கு தொடங்கியது.

தேசிய கொடி ஏற்றிவிட்டு பாதயாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தியுடன் மாற்று திறனாளிகள், பெண்கள், கல்லூரி மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதுபோல வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ராகுல் காந்தியின் பாதயாத்திரை நேற்று காலை 10 மணிக்கு காருக்குட்டி கப்பிலா சந்திப்பில் நிறைவடைந்தது. பின்னர் அங்கிருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் பாதயாத்திரை இரவு 7 மணிக்கு சாலக்குடி பகுதியில் நிறைவடைந்தது. 

இதற்கிடையே ராகுல் காந்தி இன்று ஒரு நாள் பாதயாத்திரைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு சோனியா காந்தியை பார்க்க டெல்லி செல்வார் எனக்கூறப்படுகிறது. அப்போது டெல்லியில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்தும் அவர் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார் எனக்கூறப்படுகிறது. கேரளாவில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஒருநாள் பிரியங்கா காந்தியும் பங்கேற்பார் எனக்கூறப்படுகிறது. தற்போது ராகுல் காந்தியுடன் தினமும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும், அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகளும் பங்கேற்று வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து