முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க அக். 3 கடைசி நாள்

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2022      தமிழகம்
Medical 2022 09 09

Source: provided

சென்னை : சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் நாட்டு கோழி கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்வக்குமார் பார்வையிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், 

4 இளங்கலை கால்நடை மருத்துவ படிப்புகளில் 680 இடங்கள் உள்ளன. இதில் இட ஒதுக்கீடு போக மீதமுள்ள 550 இடங்களுக்கு 14 ஆயிரம் விண்ணப்பங்கள் இதுவரையில் பெறப்பட்டுள்ளன. தற்போது மருத்துவ படிப்பை போன்று கால்நடை படிப்புக்கும் விண்ணப்பிக்க கடைசிநாள் அக்டோபர் 3-ம் தேதி என்று நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

கால்நடை மருத்துவ படிப்புக்கு கடந்த 12-ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் (26-ம் தேதி) முடிவடைய இருந்த நிலையில் தற்போது அது நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து