முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவை, காரைக்காலில் காலாண்டு தேர்வுகள் இன்று தொடங்குகிறது

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2022      இந்தியா
Nmachivayam 2022-09-25

Source: provided

புதுச்சேரி: புதுவை, காரைக்காலில் திட்டமிட்டப்படி காலாண்டு தேர்வுகள் இன்று தொடங்கும் என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். 

புதுவையில் வைரஸ் காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த புதுவை, காரைக்காலில் ஒன்று முதல் 8-ம் வகுப்புகளுக்கு ஒருவாரம் விடுமுறை விடப்பட்டிருந்தது. அத்துடன் இன்று முதல் காலாண்டு தேர்வு தொடங்க உள்ளதாக கல்வித்துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் வைரஸ் காய்ச்சல் தொடர்ந்து பரவி வருவதால் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி பொதுமக்களிடம் இருந்தது. 

ஆனால் புதுவையில் இன்று ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,

காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த ஒரு வார விடுமுறைக்கு பிறகு புதுவை, காரைக்காலில் பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. திட்டமிட்டப்படி புதுவை, காரைக்காலில் காலாண்டு தேர்வுகளும் இன்று தொடங்கும். தேர்வுகள் வருகிற 30-ம் தேதி வரை நடக்கும். தேர்வு முடிந்த பிறகு ஒரு வாரத்துக்கு விடுமுறை விடப்படும். அக்டோபர் 6-ம் தேதி முதல் 2-ம் பருவத்துக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து