முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் நடந்த 38-வது சிறப்பு முகாமில் 7.75 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது : அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2022      தமிழகம்
Ma-Subramaini-1 2022-09-22

Source: provided

சென்னை : தமிழக முதல்வரின் உத்தரவின் படி தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்தம் 50,000 சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இதுவரை நடைபெற்ற  37 மெகா கோவிட் தடுப்பூசி முகாம்களில் 5 கோடியே  43 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். 

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட விருகம்பாக்கம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி முகாமினை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது, 

நேற்று 25-ம் தேதி வரை 12-14 வயதுயுடைய 19,91,349 பயனாளிகளுக்கு முதல் தவணை மற்றும் 15,92,420 பயனாளிகளுக்கு மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.  மேலும், 15-17 வயதுயுடைய 30,54,613 பயனாளிகளுக்கு முதல் தவணை மற்றும் 26,02,003 பயனாளிகளுக்கு இரண்டாம் தவணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியாக மொத்தம்      92,27,702 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்று நடைபெற்ற சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி முகாமில்  12 வயதிற்கு மேற்பட்ட 7,75,193 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 29,729 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 1,49,804 பயனாளிகளுக்கும் மற்றும் முன்னெச்சரிக்கை தவணையாக 5,95,660 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டோரில் 96.59 சதவீதம் முதல் தவணையாகவும் 91.61 சதவீதம் இரண்டாம் தவணையாகவும் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, மக்கள் மற்றும் குடும்ப நல்வாழ்வுத் துறை சுகாதார செயலாளர் செந்தில் குமார், நிலைக்குழு தலைவர் (கணக்கு) தனசேகரன், நிலைக்குழு தலைவர் (பொது சுகாதாரம்) டாக்டர்.கோ.சாந்தகுமாரி, மண்டலக்குழு தலைவர் கிருஷ்ணமுர்த்தி, துணை ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவாத், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துதுறை, இயக்குநர், டாக்டர்.செல்வ விநாயகம், இணை இயக்குநர் (தடுப்பூசி), மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகர நல அலுவலர்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.  மேலும், மாநிலத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமினை முன்னிட்டு இன்று கொரோனா தடுப்பூசி பணிகள் நடைபெறாது என கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து