முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசத்தில் படகு விபத்து: பலி எண்ணிக்கை 39-ஆக உயா்வு

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2022      உலகம்
Boat 2022-09-27

Source: provided

டாக்கா: வங்கதேசத்தில் பிரசித்தி பெற்ற போதேஸ்வரி கோயிலுக்கு இந்து பக்தர்களை ஏற்றிச் சென்ற படகு நதியில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 39-ஆக உயா்ந்துள்ளது. 

இது குறித்து தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் கூறுகையில்,  கொரோட்டா நதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை படகு விபத்து ஏற்பட்ட பகுதியில் நடைபெற்ற மீட்புப் பணிகளில் மேலும் பல சடலங்கள் மீட்கப்பட்டன. அதையடுத்து, விபத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 39-ஆக உயா்ந்துள்ளது என்றார். 

வங்கதேசத்தின் பஞ்சகா் மாவட்டத்தில் பல நூற்றாண்டுகள் பழைமையான போதேஸ்வரி கோயில் அமைந்துள்ளது. நவராத்திரி விழாவை முன்னிட்டு இந்தக் கோயிலுக்கு பக்தா்கள் சென்ற விசைப் படகு ஒன்று நதியில் கவிழ்ந்தது. இதில் உயிரிழந்தவா்களில் 11 சிறுவா்களும் 21 பெண்களும் அடங்குவர். இதுதவிர மேலும் 58 பேரைக் காணவில்லை என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து