முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவனந்தபுரத்தில் முதல் டி-20 போட்டி: இந்திய - தென் ஆப்பிரிக்க அணிகள் இன்று மோதல்

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2022      விளையாட்டு
T-20 2022-09-27

Source: provided

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் இன்று நடக்கும் முதல் டி-20 போட்டியில் இந்திய - தென் ஆப்பிரிக்க அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் இந்திய மண்ணில் டி-20 தொடரில் தென் ஆப்பிரிக்க அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து தக்க வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

டி-20 போட்டிகள்...

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் 20 ஓவர் போட்டி தொடர் நடக்கிறது. முதல் போட்டி இன்று (28-ம் தேதி) திருவனந்தபுரத்திலும், 2-வது போட்டி அக்டோபர் 2-ம் தேதி கவுகாத்தியிலும், 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி 4-ம் தேதி இந்தூரிலும் நடக்கிறது. போட்டிகள் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

புவனேஸ்வர் ஓய்வு...

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஆல் ரவுண்டர் அக்‌ஷர் பட்டேல், பந்து வீச்சில் பும்ரா, தீபக் சாகர், சாஹல், ஹர்சல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், அஸ்வின் ஆகியோர் உள்ளனர். ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக தீபக் ஹூடாவும், கொரோனாவில் இருந்து குணமடையாததால் முகமது சமியும் இத்தொடரில் இருந்து விலகி உள்ளனர். அவர்களுக்கு பதில் ஸ்ரேயாஸ் அய்யர், ஷபாஸ் அகமது ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.

ராகும், கோலி...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை வென்ற கையோடு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி களம் இறங்குகிறது. அந்த உத்வேகத்தை தொடர இந்திய வீரர்கள் முயற்சிப்பார்கள். பேட்டிங்கில் ரோகித் சர்மா, கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

பந்து வீச்சில்....

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்தியாவின் பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை. கடைசி கட்டத்தில் அதிக ரன்களை இந்திய பந்து வீச்சாளர்கள் விட்டு கொடுத்தனர். இதனால் கடைசி கட்ட பந்து வீச்சில் முன்னேற்றம் காண்பது அவசியமாகும். 

11 முறை வெற்றி...

பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியில் குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்க்ராம், டேவிட் மில்லர், டுவைன் பிரிட்டோரியஸ், வெய்ன் பார்னல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரபடா, நார்ஜே, நிகிடி, ஷம்சி, கேசவ் மகராஜ், மார்கோ ஜேன்சன், ஹென்ரிச் கிளாசென் ஆகிய வீரர்கள் உள்ளனர். இந்தியா-தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் போட்டியில் இதுவரை 20 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 11 முறையும், தென் ஆப்பிரிக்கா 8 முறையும் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

ஆதிக்கம் செலுத்துமா ?

தென் ஆப்பிரிக்கா அணி இந்திய மண்ணில் 20 ஓவர் தொடரை இதுவரை இழக்கவில்லை. 2015-ம் ஆண்டு நடந்த தொடரை 2-0 (3 ஆட்டம்) என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. 2019-ம் ஆண்டு 1-1 (3 ஆட்டம்) என்ற கணக்கிலும், 2022 ஜூன் மாதம் நடந்த தொடர் 2-2 (5 ஆட்டம்) என்ற கணக்கிலும் சமனில் முடிந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து