முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலககோப்பை கால்பந்து போட்டி: கத்தார் அரசு முக்கிய அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2022      விளையாட்டு
Football 2022--09-30

Source: provided

22-வது பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 20-ம் தேதி கத்தாரில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாகப் பிரிக்கப்பட்டன.உலக கோப்பையை நடத்தும் கத்தார், ஈகுவடார் அணிகள் நவம்பர் 20-ம் தேதி மோதுகின்றன. இந்த நிலையில் உலகக்கோப்பை போட்டியை காண ரசிகர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயமில்லை என கத்தார் அரசு அறிவித்துள்ளது.

ஆனால், பாதுகாப்பான சூழலை மீறுபவர்களுக்கு போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் எனவும் ,கொரோனா தொற்று பரவ தொடங்கினால், வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் பாதுகாப்பான "பயோ-பப்பில்" கட்டாயப்படுத்தப்படலாம் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும் நவம்பர் 20 ஆம் தேதி தொடங்கும் போட்டிக்காக கத்தாருக்கு வருபவர்கள் தாங்கள் விமானம் பயணம் மேற்கொள்ளும் முன் 6 வயதுக்கு மேற்பட்ட அனைவரும்  கொரோனா நெகட்டிவ் என்பதை உறுதிப்படுத்த அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

____________

உம்ரானை எடுத்திருக்கலாம்: திலிப் வெங்சர்க்கார் கருத்து

பும்ரா முதுகு வலி காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகினார். அதன்பின், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் விளையாடினார். தற்போது நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடியபோது, மீண்டும் முதுகு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்கா தொடரில் இருந்து விலகியுள்ளார். ஆகவே, பும்ரா டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் முன்னாள் இந்திய அணி தேர்வாளரான வெங்சர்க்கார், நான் தேர்வாளராக இருந்திருந்தால், இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக்கை அணியில் சேர்த்திருப்பேன் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெங்சர்க்கார் கூறுகையில் ''உம்ரான் மாலிக் விஷயத்தில் மாற்றி யோசிக்க ஒன்றுமில்லை. நான் அவரை அணியில் தேர்வு செய்திருப்பேன். ஏனென்றால், அவரது வேகம். அவர் 150 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசுகிறார். நீங்கள் அவரை தற்போது தேர்வு செய்ய வேண்டும். அவர் 130 கி.மீட்டர் வேக பந்து வீச்சாளராக இருந்தால், தேர்வு செய்ய இயலாது என்றார்.

____________

வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு இந்திய ஜோடி தகுதி

வியட்நாம் பேட்மிண்டன் ஓபன் தொடர் நடந்து வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் ஜோடி பிரிவில் இந்தியாவின் சிக்கி ரெட்டி-ரோகன் கபூர் காலிறுதிக்கு தகுதி பெற்றனர். இந்த ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஹாங்காங்கின் பேன்காயான்-யுங் ஷிங் சோய் ஜோடியை 21-10, 19-21, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது. மற்ற இந்திய ஜோடிகளான மவுரியன் கத்வரன்-குஷான் பாலாஷ்ரி மற்றும் பொக்கா நவனித்-பிரியா கொன்ஜெங்பாம் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

_____________

சரியான நேரத்தில் பார்முக்கு திரும்பிய கோலி: ராஸ் டெய்லர் 

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர். இவர் தற்போது இந்தியாவில் நடந்து வரும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஐ.பி.எல். போட்டியில், பெங்களூர் அணியில் விராட் கோலியுடன் விளையாடிய நேரத்தை மிகவும் ரசித்தேன். 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக சரியான நேரத்தில் விராட் கோலி பார்முக்கு திரும்பி உள்ளார். அவர் சிறந்த பார்மில் இருக்கிறார். வரும் ஆண்டுகளில் நிறைய சதங்கள் அடிப்பார் என்று நம்புகிறேன்.

இந்த உலக கோப்பையில் இன்னும் நிறைய திறமைகள் வெளிப்படும் என்று நினைக்கிறேன். போட்டி ஆஸ்திரேலியாவில் நடப்பதாலும் நடப்பு சாம்பியனாக இருப்பதாலும் கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்திய அணி சம பலத்துடன் இருக்கிறது. மேலும் சொந்த மண்ணில் சில ஆட்டங்களில் அவர்கள் விளையாடிய விதம், உலக கோப்பை போட்டிக்கு செல்வதற்கு அவர்களுக்கு நிறைய நம்பிக்கையை கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

____________

ரன் அவுட் சர்ச்சை பற்றி இந்திய மகளிர் அணி கேப்டன் கருத்து

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்திய மகளிர் அணி. கடைசி ஒருநாள் ஆட்டத்தில் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது. எதிர்முனையில் பந்துவீசும் முன்பு வெளியேறிய இங்கிலாந்து பேட்டர் சார்லி டீனை ரன் அவுட் செய்தார் இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் தீப்தி சர்மா. அவுட் என நடுவர் தீர்ப்பு வழங்கினாலும் கிரிக்கெட்டின் மாண்பைக் குறைக்கும் செயல் சர்ச்சை ஏற்பட்டு சமூகவலைத்தளங்களில் இதுதொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

அடுத்ததாக ஆசியக் கோப்பை டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி விளையாடவுள்ளது. இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர், ரன் அவுட் விவகாரம் பற்றி கூறியதாவது: இந்த விஷயத்தை சில ஆட்டங்களாகவே கவனித்து வந்தோம். கிரீஸை விட்டு நன்கு வெளியே நின்று கொண்டு சாதகமான சூழலை உருவாக்கிக் கொண்டிருந்தார். இதைக் கவனித்து வந்தார் தீப்தி சர்மா. அதைப் பற்றி நாங்கள் விவாதித்தோம். ஆனால் அவரை அது போல ஆட்டமிழக்கச் செய்வது எங்களுடைய திட்டம் அல்ல. மைதானத்தில் விளையாடும்போது எப்படியாவது வெற்றி பெறவே எண்ணுவோம். விதிமுறைப்படி விளையாடுவது முக்கியம் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து