முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

154-வது பிறந்த நாள்: மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை

ஞாயிற்றுக்கிழமை, 2 அக்டோபர் 2022      இந்தியா
Murmu 2022-10-02

Source: provided

புதுடெல்லி : தேசப்பிதா காந்தியின் 154-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த நாள் (காந்தி ஜெயந்தி) நேற்று கொண்டாடப்பட்டது. இது இந்தியாவின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தேசிய விடுமுறை நாட்களில் ஒன்றாகும்.

இது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் அனுசரிக்கப்படுகிறது. காந்தி ஜெயந்தி அன்று புதுடெல்லயில் காந்தி தகனம் செய்யப்பட்ட நினைவு இல்லமான ராஜ்காட் உட்பட இந்தியா முழுவதும் பிரார்த்தனைகள், சேவைகள் மற்றும் அஞ்சலிகள் ஆகியவை நடத்தப்பட்டன. இந்நிலையில் நேற்று காலை மகாத்மா ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா மற்றும் முக்கிய தலைவர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். பிறந்த நாளையொட்டி மகாத்மா காந்தியின் பஜனை பாடல்கள் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து