முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரம்மோற்சவ விழா 8-ம் நாள்: திருப்பதியில் இன்று மகா தேரோட்டம்

திங்கட்கிழமை, 3 அக்டோபர் 2022      ஆன்மிகம்
Tirupati 2022-10-03

Source: provided

திருப்பதி : பிரம்மோற்சவ விழா 8-ம் நாளான இன்று திருப்பதியில் மகா தேரோட்டம் நடைபெறுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி 6-வது நாளான நேற்று முன்தினம் காலை அனுமந்த சேவை நடந்தது. மாலை 4 மணிக்கு தங்க தேரோட்டம் 4 மாட வீதிகளில் நடந்தது.

ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் தங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். இரவு ஏழுமலையான் கஜ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பிரம்மோற்சவ விழா 7-வது நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகனத்தில் ஏழுமலையான் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராய் 4 மாட வீதிகளில் உலா வந்தார். மாலை சந்திர பிரபை வாகனத்தில் பவனி வந்தார்.

8-வது நாளான இன்று காலை மகா தேரோட்டம் நடக்கிறது. மாடவீதியில் உலா வரும் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து செல்கின்றனர். மாலை ஏழுமலையான் குதிரை வாகனத்தில் பவனி வருகிறார்.

9-வது நாளான நாளை காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலை கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது. திருப்பதியில் நேற்று முன்தினம் 82,463 பேர் தரிசனம் செய்தனர். ரூ 2.31 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து