எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஜம்மு : ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி, தான் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, ஜம்மு-காஷ்மீர் இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தம்பட்டம் அடித்து வருகிறார். ஆனால், என்னுடைய கட்சித் தொண்டரின் திருமணத்திற்குச் செல்ல முடியாமல் நான் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளேன்.
முன்னாள் முதல்வரின் அடிப்படை உரிமையே எளிதாக பறிக்கப்படும் போது சாமானியர்களின் நிலையை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், மெஹபூபா முப்தியை வீட்டுச் சிறையில் வைக்கவில்லை. வாயிற்கதவுகளை அவரே போட்டு விட்டு இவ்வாறு கூறுவதாக ஸ்ரீநகர் காவல்துறை பதில் அளித்துள்ளது.
ஆனால், காவல்துறை தான் வாசல் கதவுகளை உள்பக்கமாக பூட்டியதாகவும் காவல்துறை, வாய் கூசாமல் பொய் கூறுவதாகவும் தெரிவித்த முப்தி, சட்டத்தைப் பின்பற்ற வேண்டிய அமைப்புகளே வெட்கமின்றி தங்கள் தடங்களை மறைக்க முயல்வது வருத்தமளிப்பதாகக் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |