Idhayam Matrimony

விஜயதசமியை முன்னிட்டு தமிழக கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

புதன்கிழமை, 5 அக்டோபர் 2022      ஆன்மிகம்
Vijayadashami 2022--10-05

Source: provided

சென்னை : விஜயதசமி நாளில் தொடங்கும் காரியங்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. அதன் காரணமாக விஜயதசமி நாளில் குழந்தைகள் கல்வியை தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பதால் விஜயதசமி நாளில் கல்வி கலைகளை கற்கத் தொடங்குகின்றனர்.  விஜயதசமியை முன்னிட்டு தமிழக கோவில்களில் வித்யாரம்பம் எனப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. 

இதன் ஒரு பகுதியாக சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் கிருஷ்ணா நம்பூதிரி குழந்தையின் நாவில் ஹரி என எழுதியும், பச்சரிசியில் முதல் எழுத்தை குழந்தையின் விரலை பிடித்து எழுதியும் தொடங்கி வைத்தார். சென்னை வடபழனி முருகன் கோவிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஐ.ஐ.டி.இயக்குனர் காமகோடி, பிரபல பின்னணி பாடகி பி. சுசீலா ஆகியோர் குழந்தைகளின் கையை பிடித்து நெல்மணிகளில் தமிழ் உயிரெழுத்துக்களை எழுத வைத்தனர். குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள வனமாலீஸ்வரர் சரஸ்வதி கோவிலிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று குழந்தைகளை நெல்மணிகளில் எழுத வைத்து கல்வியை தொடங்கி வைத்தனர். 

கோவை, சித்தாபுதூர் ஐயப்பன் கோயில் குழந்தைகளின் கல்வியை தொடங்கும் விதமாக வித்யாரம்பம் என்ற நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது.  குழந்தைகளின் விரலை பிடித்து  ஹரி  ஸ்ரீ கணபதியே நமஹா  என எழுதியும், பச்சரியில்  ஓம் என்றும், அம்மா அப்பா என்றும் விரல் பிடித்து குழந்தைகளை எழுத வைத்து கல்வியை விஜயதசமி நாளான நேற்று தொடங்கினர்.

கிருஷ்ணகிரி ஐயப்பன் கோவிலில் நடந்த எழுத்தறிவித்தல் நிகழ்வில் குருசாமி தேவராஜ் குழந்தைகளின் விரலை பிடித்து பச்சரிசியில் ஓம் என எழுதி தொடங்கி வைத்தார். மேலும் குழந்தைகளின் நாக்கில் தங்கத்திலான பொருளை கொண்டு ஹரி ஓம் என எழுதினார். விஜயதசமி நாளில் கல்வியை தொடங்கினால் குழந்தைகள் படிப்பில் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கையால் கோயிலுக்கு அழைத்து வந்ததாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.  இதையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் விஜயதசமியை முன்னிட்டு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற்றது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து