முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொள்ளிடம் ஆற்றில் முழ்கி பலியான 6 பேர் குடும்பத்தினருக்கு தலா 3 ரூபாய் லட்சம் நிவாரண நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

புதன்கிழமை, 5 அக்டோபர் 2022      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை : கொள்ளிடம் ஆற்றில் முழ்கி பலியான 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆன்மீக சுற்றுலாவிற்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்திருந்த தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி கிராமம், சிலுவைப்பட்டியைச் சேர்ந்த சார்லஸ் (38), பிருத்விராஜ் (36), தாவீதுராஜா (30), பிரவீன்ராஜ் (19), ஈசாக் (19) மற்றும் செல்வன் அண்டோ கெர்மஸ் ரவி ஆகிய ஆறுபேரும் நேற்று முன்தினம் (3.10.2022) காலை சுமார் 9 மணியளவில் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றபோது பள்ளத்தில் விழுந்ததில் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் மூன்று இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து