முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒற்றுமை நடை பயணத்தில் தாயார் சோனியா காந்தியின் ஷூலேசை கட்டிவிட்ட ராகுல்

வியாழக்கிழமை, 6 அக்டோபர் 2022      இந்தியா
Rahul 2022-10-06

Source: provided

மாண்டியா: இந்திய ஒற்றுமை பயணத்தில் உடன் நடந்து வந்த தனது தாயார் சோனியா காந்தியின் ஷூ லேசை, ராகுல் காந்தி கட்டிவிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த மாதம் 8-ம் தேதி முதல் மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை, கேரளா வழியாக தற்போது கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது.

கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற யாத்திரையில் ராகுல் காந்தியுடன் சேர்ந்து சோனியா காந்தியும் சில கிலோ மீட்டர் தூரம் நடந்தார். அப்போது, சோனியா காந்தியின் ஷூ லேஸ் கழன்றதை அடுத்து, ராகுல் காந்தி எவ்வித தயக்கமும் இன்றி உடனடியாக அதனைக் கட்டிவிட்டார். அருகில் இருந்தவர்கள் இதனை வீடியோவாகவும் புகைப்படமாகவும் எடுத்து சமூக ஊடகங்களில் பரவவிட்டுள்ளனர். அம்மா - பிள்ளை பாசத்திற்கு இது எடுத்துக்காட்டு என காங்கிரஸ் கட்சியினர் சிலாகித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து