முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் பள்ளிச் சுற்றுலா பேருந்து விபத்தில் 9 பேர் பலி

வியாழக்கிழமை, 6 அக்டோபர் 2022      இந்தியா
Bus-Accident 2022-10-06

Source: provided

பாலக்காடு: கேரளாவில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உள்பட 9 பேர் பலியாகினர். கேரள மாநிலம் பாலக்காட்டில் தனியார் சுற்றுலா வாகனம் அரசுப் பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து நடந்துள்ளது.

இது குறித்து கேரள போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி ராஜூ கூறுகையில், "நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு விபத்து நடந்துள்ளது. தனியார் பேருந்து அதிகமாகச் சென்று முன்னால் சென்ற அரசுப் பேருந்தை முந்த முயன்றுள்ளது. அதில் விபத்து நடந்தது. இதில் 5 மாணவர்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். தனியார் பேருந்து ஓட்டுநரின் அலட்சியம் மற்றும் பேருந்தின் அதி வேகம் காரணமாகவே விபத்து நடந்துள்ளது" என்றார்.

தனியார் பேருந்தில் 42 மாணவர்களும் 5 ஆசிரியர்களும் இருந்தனர். அவர்கள் அனைவரும் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த வித்யாநிகேதன் சீனியர் செகண்ட்ரி பள்ளியைச் சேர்ந்தவர்களாவர். விபத்தில் காயமடைந்தவர்கள் பாலக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மாநில வருவாய் துறை அமைச்சர் கே.ராஜன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து