முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற நேபாள அதிபர் டிஸ்சார்ஜ்

புதன்கிழமை, 12 அக்டோபர் 2022      உலகம்
Pitya-Devi 2022-10-12

Source: provided

காத்மண்டு : கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். 

நேபாள அதிபராக உள்ள பித்யா தேவி பண்டாரி (61) உடல்நலக் குறைவால் காத்மண்டுவில் உள்ள மருத்துவமனையில் கடந்த 7-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி அவரது செயலாளரான பேஷ் ராஜ் அதிகாரி செய்தியாளர்களிடம் கூறும் போது,

நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. அவருக்கு குளிர் ஜுரம், இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவை காணப்படுகின்றன. இதனால், அவர் காத்மண்டுவில் உள்ள மகராஜ்கஞ்ச் பகுதியில் அமைந்த திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு அதற்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என கூறினார். 

அவருக்கு கொரோனா பரிசோதனையும் நடந்தது. இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர். அவர் கொரோனா தடுப்பூசி முழுமையாக போட்டுள்ளார். அதனால், கவலையளிக்கும் வகையிலான பிரச்னைகள் ஏற்படாது என நம்பிக்கையும் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்பு, உடல்நலம் தேறிய அவர் மருத்துவமனையில் இருந்து பூரண குணம் பெற்று வீடு திரும்பினார்.

அவருக்கு இருந்து காய்ச்சல் மற்றும் பிற சுகாதார பிரச்னைகள் தீர்ந்து விட்டன. உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என மருத்துவமனையின் தகவல் அதிகாரி ராம் பிக்ரம் அதிகாரி கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து