முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ. 3,700 கோடி சொத்துக்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2022      ஆன்மிகம்      தமிழகம்
Shekhar-Babu 2022-11-11

தமிழகம் முழுவதும் அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ. 3,700 கோடி அளவிலான சொத்துக்கள் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். 

நெல்லையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:- 

கடந்த ஆட்சியில் திட்டமிடப்படாமல் கட்டப்பட்ட தமிழகத்தில் உள்ள 11 திருமேனி பாதுகாப்பு மையங்களிலும் காவலர்கள் நியமிப்பதில் இருந்த சிக்கலை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் திருமேனி பாதுகாப்பு மையங்கள் செயல்படும். தமிழகம் முழுவதும் அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ. 3,700 கோடி அளவிலான சொத்துக்கள் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளது. 

நெல்லையப்பர் கோவிலில் கடந்த 8 ஆண்டுகளாக பணிகள் நடைபெறாமல் இருந்த அம்பாள் சன்னதி மேற்கு பிரகாரம், கரு உருமாரி தெப்பம் மற்றும் அம்பாள் சன்னதி மேல் கூரை ஓடு அமைக்கும் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டு டி.வி.எஸ். நிறுவனத்தின் உபயத்தில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்குள் இந்த பணிகள் நிறைவு பெறு அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில்களில் உள்ள வாகனங்கள் சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

அறநிலை துறைக்கு சொந்தமான கல்லூரிகள் தற்காலிகமாக இயங்கி வரும் நிலையில் மீதமுள்ள கல்லூரிகளுக்கான அனுமதி வழங்குவது தொடர்பான நீதிமன்ற வழக்கு முடிவு பெற்றபின் செயல்பாட்டுக்கு வரும். நெல்லையப்பர் கோவில் தேருக்கு கண்ணாடி தகடு அமைப்பது தொடர்பான மதிப்பீடு செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு அடுத்த மானிய கோரிக்கையில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து