முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இம்ரான்கானை மீண்டும் கொல்ல முயற்சி நடக்க வாய்ப்பு: பாக். நீதிபதி

சனிக்கிழமை, 19 நவம்பர் 2022      உலகம்
Imran-Khan 2022--09-30

இம்ரான்கான் மீது மீண்டும் கொலை முயற்சி நடக்க வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் நீதிபதி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். 

பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான்-தெஹ்ரீக்-இன்சாப் கட்சி (பிடிஐ) கடந்த மாத இறுதியில் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி பேரணியை தொடங்கியது. இந்த பேரணியில் பங்கேற்க கடந்த 3-ம் தேதி பஞ்சாப் மாகாணத்தின் குஜ்ரன்வாலா பகுதிக்கு இம்ரான்கான் சென்றார். அப்போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் இம்ரான்கானை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவரது வலதுகாலில் குண்டு பாய்ந்த நிலையில் காயங்களுடன் உயிர் தப்பினார். 

இதனிடையே அரசுக்கு எதிரான இந்த பேரணியில் தான் மீண்டும் பங்கேற்க இருப்பதாக இம்ரான்கான் கூறிவருகிறார். இந்த நிலையில் இம்ரான்கான் கட்சியினரின் போராட்டத்தால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி சாலையோர வியாபாரிகள் தாக்கல் செய்த மனுவை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு விசாரித்தது. அப்போது நீதிபதி அமீர் பாரூக் உளவுத்துறை தகவல்களை மேற்கோள்காட்டி இம்ரான்கான் மீது மீண்டும் கொலை முயற்சி நடக்க வாய்ப்பு இருப்பதாக பரபரப்பு தகவலை வெளியிட்டார். 

மேலும் முன்னாள் பிரதமருக்கு எதிரான இந்த அச்சுறுத்தல் குறித்து கவனம் செலுத்துவது அரசின் பொறுப்பு என நீதிபதி வலியுறுத்தினார். தொடர்ந்து, பேரணிக்கு அனுமதி கோரி புதிய மனுவை இஸ்லாமாபாத் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க இம்ரான்கானின் கட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து