முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்பை மீண்டும் அனுமதிக்கலாமா?: எலான் மஸ்க் டுவிட்டரில் வாக்கெடுப்பு

சனிக்கிழமை, 19 நவம்பர் 2022      உலகம்
Elon-Musk 2022-10-28

டொனால்டு டிரம்பை டுவிட்டரில் மீண்டும் சேர்க்கலாமா என்பது குறித்து எலான் மஸ்க் டுவிட்டரில் வாக்கெடுப்பை தொடங்கியிருக்கிறார். 

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் டுவிட்டர் கணக்கு கடந்த 2020-ம் ஆண்டு முடக்கப்பட்டது. வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக டிரம்பின் கணக்கு முடக்கப்பட்டது. தற்போது டுவிட்டரை எலான் மஸ்க் வாங்கியிருக்கும் நிலையில் டிரம்பிற்கு மீண்டும் அவரது டுவிட்டர் கணக்கை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுமா? என்பது குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன. 

இந்த நிலையில், டொனால்டு டிரம்பை டுவிட்டரில் மீண்டும் சேர்க்கலாமா என்பது குறித்து எலான் மஸ்க் டுவிட்டரில் வாக்கெடுப்பை தொடங்கியிருக்கிறார். இந்த வாக்கெடுப்பில் பெரும்பாலானவர்கள் டிரம்பை சேர்க்கலாம் என்றே பதிவிட்டு வருவதாக கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து