முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திகார் சிறை சுற்றுலா தலமா? - சத்யேந்தர் ஜெயின் விவகாரத்தில் அறிக்கை கேட்கும் டெல்லி கோர்ட்

புதன்கிழமை, 23 நவம்பர் 2022      இந்தியா
Satyendra-Jain 2022-11-23

Source: provided

புதுடெல்லி : திகார் சிறையில் உள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், மசாஜ், வகைவகையான உணவு வகைகளை அனுபவித்து வருவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சிறை நிர்வாகத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உடல் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய திங்கள் கிழமை (நவ.28) வரை அவகாசம் அளித்துள்ளது. 

டெல்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின், சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டப்படி குற்றம் சாட்டப்பட்டு, கடந்த மே 30 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2017-ஆம் ஆண்டில் சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக சிபிஐ எஃப்ஐஆா் பதிவு செய்தது. அதன் அடிப்படையில், பணமோசடி வழக்கில் சத்யேந்தா் ஜெயின் மற்றும் இருவரை அமலாக்க இயக்குநரகம் கைது செய்தது. மேலும், அவருடன் தொடா்புடையதாகக் கூறப்படும் நான்கு நிறுவனங்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டிருந்த சத்யேந்தர் ஜெயின் பின்னர் திகார் சிறைக்கு மாற்றப்பட்டார்.  திகார் சிறையில் உள்ள அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், மசாஜ் உள்ளிட்டவற்றை செய்துகொள்வதைப்போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகின. வெவ்வேறு நாள்களில் பதிவான விடியோக்களில், கால் மசாஜ், தலை மசாஜ் போன்றவை செய்யப்படுகிறது. 

அதோடு மட்டுமல்லாமல், சிறை அறையில் குடிநீர் பாட்டில்கள் இருப்பதும், சில ஆவணங்களைப் படுத்தவாறு சரிபார்ப்பதும், வகைவகையான உணவுகளை (வெரைட்டி ரைஸ்) உண்பது போன்றும் அடுத்தடுத்து விடியோக்கள் வெளியாகின. 

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என திகார் சிறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை இன்று (நவ.24) பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல், சிறையில் உள்ள அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து