முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி-20 மாநாட்டில் பங்கேற்கிறார்: டிச.5-ல் மம்தா டெல்லி பயணம்

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2022      இந்தியா
Mamtha 2022-11-24

Source: provided

கொல்கத்தா: ஜி20 மாநாட்டில் பங்கேற்க டிசம்பர் 5ஆம் தேதி புது தில்லி செல்ல உள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி  தெரிவித்துள்ளார்.

ஜி20 உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் கடந்த நவம்பர் 15, 16 தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டு நிறைவு விழாவில் ஜி20 தலைமைத்துவம் இந்தியாவிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. அப்போது, அனைத்து நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலமாக ஜி20 மாநாட்டை உலக நலனுக்கான செயலூக்கம் அளிக்கும் அமைப்பாக உருவாக்க முடியும் என்று பிரதமா் மோடி கூறினார். இந்த தலைமைப் பொறுப்பை டிசம்பா் 1-ஆம் தேதியிலிருந்து இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்கவுள்ளது.

இந்நிலையில், அடுத்த ஓராண்டில் ஜி20 மாநாட்டில் செயல்படவேண்டிய கூட்டு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையிலான ஏற்பாடுகள் தில்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக டிசம்பர் 5-ம் தேதி தில்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ளவிருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

அடுத்த ஜி20 உச்சி மாநாட்டை 2023இல் இந்தியா நடத்துகிறது. ஜி20 கூட்டமைப்பில் வளர்ந்த மற்றும் வளா்ந்து வரும் நாடுகளான ஆா்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேஸில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜொ்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷியா, செளதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகிய 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து