முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் வலிமையான அணுசக்தி நாடாக மாறுவதே எங்களது இலக்கு : வடகொரிய அதிபர் சொல்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2022      உலகம்
KIM 2022-11-02

Source: provided

சியோல் : உலகின் வலிமையான அணுசக்தியை கொண்ட நாடாக மாறுவதே தங்களது இலக்கு என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறியுள்ளார். 

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா அடிக்கடி நடத்தி வருகிறது. பல்வேறு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா இதனை செய்து வருகிறது. இதனை தொடர்ந்து ஏவுகனை சோதனையில் ஈடுபட்ட பல ராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. 

இதனிடையே, உலகின் மிக சக்திவாய்ந்த அணுசக்தியை வைத்திருப்பதே தனது நாட்டின் இறுதி இலக்கு என்று வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் செய்தி வெளியிட்டுள்ளார். நாட்டின் புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் சோதனையை கிம் ஆய்வு செய்த பின்னர், அமெரிக்க அணு ஆயுத அச்சுறுத்தல்களை அணு ஆயுதங்கள் மூலம் எதிர்கொள்வதாக உறுதியளித்த பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது. 

மேலும் அவர், தற்போது சோதனை செய்யப்பட்டுள்ள ஏவுகணை உலகின் வலுவான மூலோபாய ஆயுதம் என்று கூறினார். இது வட கொரியாவின் உறுதியையும், இறுதியில் உலகின் வலிமையான இராணுவத்தை உருவாக்கும் திறனையும் நிரூபிப்பதாக அவர் கூறினார்.

மேலும் வட கொரிய விஞ்ஞானிகள் பாலிஸ்டிக் ஏவுகணைகளில் அணு ஆயுதங்களை ஏற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் ஒரு அற்புதமான முன்னேற்றத்தை அடைந்துள்ளனர் என்றும் கிம் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து