முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாஸ் மகன் கென் இசையமைக்கும் சல்லியர்கள்

திங்கட்கிழமை, 28 நவம்பர் 2022      சினிமா
Karunas-son-Ken 2022-11-28

Source: provided

ICW நிறுவனம் சார்பில் கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் சல்லியர்கள். கிட்டு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கருணாஸ் மகன் கென் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். இந்தப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.  இதில் கலைப்புலி தாணு, இயக்குநர்கள் வெற்றிமாறன், சீனுராமசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கருணாஸின் மகன் கென் பேசும்போது, இந்த சல்லியர்கள் படம் பற்றி சொன்னபோது ஆரம்பத்தில் எனக்கு எதுவும் புரியவில்லை. இதைப்பற்றி புரிந்து கொள்ளவே எங்களுக்கு ஒரு மாதம் ஆகிவிட்டது. உண்மையை சொல்லப்போனால் இயக்குனர் கிட்டுவுடன் வேலை பார்ப்பது ரொம்பவே கஷ்டம். ஆனால் அதன்பிறகு கதையை உள்வாங்கி இசையமைக்கத் துவங்கினோம் என்றார். இப்படத்தில் கென்னுடன் இணைந்து ஈஸ்வரும் இசையமைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து