முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்டிபயாட்டிக் மருந்துகளை சாதாரண காய்ச்சலுக்கு தரக்கூடாது: ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தல்

திங்கட்கிழமை, 28 நவம்பர் 2022      தமிழகம்
Medicine 2022-11-19

லேசான காய்ச்சலுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்தினை தரக்கூடாது என்று மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு அறிவுறுத்தியுள்ளது. 

ஆன்டிபயாட்டிக் என்று அழைக்கப்படுகின்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி தோல் மற்றும் மெல்லிய திசு நோய்த்தொற்றுகளுக்கு 5  நாட்களுக்கும், சமூக அளவில் பரவியுள்ள நிமோனியாவுக்கு 5 நாட்களுக்கும், நிமோனியா பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு 8 நாட்களுக்கும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தரலாம்.

லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்து தருவதை தவிர்க்க வேண்டும். பொதுவாக ரத்தம் அல்லது பிற திசுக்களில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களின் இருப்பு மற்றும் அவற்றின் இருப்புக்கு உடலின் எதிர்வினை ஆகியவற்றின் விளைவாக ஏற்படும் ஒரு தீவிர நிலை பல்வேறு உறுப்புகளின் செயலிழப்பு, அதிர்ச்சி மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும் செப்சிஸ் மற்றும் அதன் தீவிரநிலை சமூக அளவிலான நிமோனியா பாதித்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறுவோர் ஆகியோருக்கு மட்டுமே ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தர பரிந்துரைக்கப்படுகிறது. எனவே, ஆன்டிபயாட்டிக் சிகிச்சையை விவேகத்துடன் அளிக்க வேண்டும் என்றும் ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து