முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வானவில் மன்றம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்வீட்

திங்கட்கிழமை, 28 நவம்பர் 2022      தமிழகம்
CM-3 2022-11-28

பகுத்தறிவைப் பள்ளிப் பருவத்திலேயே ஊட்டி, நம் சிறார்கள் மனதில் ஆராய்ச்சி விதையை ஊன்றும் 'வானவில் மன்றம்' அரசுப் பள்ளி மாணவர்களுக்கான அரிய வாய்ப்பு" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில், "ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விதான் மனித இனம் அடைந்துள்ள வளர்ச்சிக்கெல்லாம் அடிப்படை. பகுத்தறிவைப் பள்ளிப் பருவத்திலேயே ஊட்டி, நம் சிறார்கள் மனதில் ஆராய்ச்சி விதையை ஊன்றும் "வானவில் மன்றம்" அரசுப் பள்ளி மாணவர்களுக்கான அரிய வாய்ப்பு. கற்றல் இனிமையாகட்டும், கல்வி முழுமையாகட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று காலை, திருச்சியில் அரசுப் பள்ளியில் படிக்கும் 6 முதல் ‌8-ம் வகுப்பு மாணவர்களுக்கான வானவில் திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து