முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 300-க்கும் கீழ் சரிவு

திங்கட்கிழமை, 28 நவம்பர் 2022      இந்தியா
India-Corona 2022 03 15

கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 71 ஆயிரத்து 853 ஆக உயர்ந்தது.கொரோனா தொற்றில் இருந்து இதுவரை மொத்தம் 4 கோடியே 41 லட்சத்து 36 ஆயிரத்து 116 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது தினசரி பாதிப்பு 300-க்கும் கீழ் சரிந்துள்ளது.

கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 343 ஆக இருந்தது. இந்நிலையில் நேற்று 291 ஆக சரிந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 71 ஆயிரத்து 853 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று முன்தினம் 429 பேர் மீண்டுள்ளனர்.

இதுவரை மொத்தம் 4 கோடியே 41 லட்சத்து 36 ஆயிரத்து 116 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 5,123 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவால் எந்த மாநிலத்திலும் புதிதாக உயிர் இழப்புகள் இல்லை. கேரளாவில் விடுபட்ட பலிகளில் 2-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,614 ஆக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து