முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் சட்டசபை தேர்தல்: மொத்த வேட்பாளர்களில் பெண்கள் 139 பேர் போட்டி

திங்கட்கிழமை, 28 நவம்பர் 2022      இந்தியா
BJP 2022-11-28

குஜராத்தில் மொத்தம் உள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணைய புள்ளி விவரங்களின்படி 1,621 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் வெறும் 139 பேர் மட்டுமே பெண்கள். 56 பேர் சுயேச்சைகள். 38 பேர் மட்டுமே 3 முக்கிய அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள். குஜராத் வாக்காளர்களில் 50 சதவீதம் பேர் பெண்கள் உள்ள நிலையில், வேட்பாளர்களில் பெண்களின் பங்கு 8.57 சதவீதம் ஆக உள்ளது.

கடந்த 2017 தேர்தலில் போட்டியிட்ட 1,828 வேட்பாளர்களில் பெண்களின் பங்கு 126 ஆக இருந்தது. இதில் பாஜகவின் 9, காங்கிரஸின் 4 பேர் என 13 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். 104 பேர் டெபாசிட் இழந்தனர். கடந்த 2017 தேர்தலில் 12 பெண்களுக்கு வாய்ப்பளித்த பாஜக இப்போது 18 பேரை களமிறக்கி உள்ளது. கடந்த தேர்தலில் 10 பேரை களமிறக்கிய காங்கிரஸ் இப்போது 14 பேருக்கு வாய்ப்பளித்துள்ளது. இவ்விரு கட்சிகளின் பெண் வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் தலித் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

 

அனைத்து தொகுதியிலும் போட்டியிடும் ஆம் ஆத்மி சார்பில் 6 பெண் வேட்பாளர்களும். 101 தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் சார்பில் 13. 13 தொகுதிகளில் மட்டும் போட்டியிடும் ஏஐஎம்ஐஎம் கட்சி சார்பில் 2 பெண்கள் போட்டியிடுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து