முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிகளில் இலவச சானிட்டரி நாப்கின்: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

திங்கட்கிழமை, 28 நவம்பர் 2022      தமிழகம்
Supreme-Court 2021 07 19

Source: provided

சென்னை : நாடு முழுவதும் பள்ளிகளில் சானிட்டரி நாப்கின்கள் இருப்பதை கட்டாயமாக்க கோரிய வழக்கில்  மத்திய, மாநில அரசுகளுக்கு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

சமூக ஆர்வலர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் அளித்த மனுவில், 'மாதவிடாய் சுகாதார மேலாண்மை, பெண்களின் கல்விக்கு பெரும் இடையூறாக இருக்கிறது. சானிட்டரி நாப்கின் உள்ளிட்ட வசதிகள் கிடைக்காததன் காரணமாக இந்தியாவில் 23 லட்சம் பெண்கள் பள்ளிப்படிப்பினை இடைநிறுத்தம் செய்துள்ளனர்.

அதனால் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள் என அனைத்துப் பள்ளிகளிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு பள்ளிகளில் இலவசமாக நாப்கின்கள் வழங்க உத்தரவிட வேண்டும். மேலும் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை பள்ளிகளில் மாணவிகளுக்கு ஏற்படுத்த வேண்டும்' என்று கோரி வழக்குத் தொடர்ந்தார். 

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், பி.எஸ்.நரசிம்மா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.  இந்த வழக்கை எடுத்துக்கொண்ட நீதிபதிகள், நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் வழங்குவது குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தொடர்ந்து 2023 ஜனவரி இரண்டாம் வாரத்திற்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து