முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

500 வகையான பொருட்களை எங்களுக்கு ஏற்றுமதி செய்யுங்கள் இந்தியாவிடம் ரஷ்யா கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2022      உலகம்
Russia 2022 12 04

Source: provided

மாஸ்கோ : கார் உதிரி பாகம் முதல் விமான உதிரி பாகம் வரை 500 வகையான பொருட்களை உடனடியாக எங்களுக்கு ஏற்றுமதி செய்யும்படி இந்தியாவிடம் ரஷ்யா கேட்டுள்ளது. 

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து நேற்றுடன் 284-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடை காரணமாக ரஷ்யாவின் தொழில்துறையில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், ரஷ்யாவின் பொருளாதாரம் முழுமையாக கச்சா எண்ணெய்யை சார்ந்ததாக மாறியுள்ளது. 

இந்நிலையில், உள்நாட்டு தொழில்துறையில் முடக்கம் ஏற்பட்டுள்ளதால் ரஷ்யா இந்தியாவின் உதவியை நாடியுள்ளது. அதன்படி, 500-க்கும் மேற்பட்ட பொருட்களை தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் படி இந்தியாவிடம் ரஷ்யா பட்டியல் கொடுத்துள்ளது. 14 பக்கங்களை கொண்ட அந்த பட்டியலில் கார் எஞ்சின் உதிரி பாகங்கள், சீட் பெல்ட் முதல் விமானத்தின் லேண்டிங் கியர், ஹெலிகாப்டர் உதிரி பாகங்கள், விமான டயர்கள் வரை என 500-க்கும் மேற்பட்ட பொருள்களை தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும்படி இந்தியாவிடம் ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளது. 

இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள முடிவு குறித்த தகவல் வெளியாகவில்லை. ரஷ்யா கேட்கும் பொருட்களை ஏற்றுமதி செய்தால் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடையை சந்திக்க நேரிடும் என இந்திய நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து