முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணை நீர்மட்டம் 118.62 அடியாக உயர்ந்தது

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2022      தமிழகம்
Mettur-Dam 2022 12 04

Source: provided

சேலம் ; மேட்டூர் அணை நீர்மட்டம் 118.62 அடியாக உயர்ந்தது.  கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை 10,436 கன அடியாகவும், பிற்பகலில் 10,656 கன அடியாகவும் அதிகரித்தது. நேற்று காலை நீர்வரத்து சற்று குறைந்து விநாடிக்கு 10,417 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருந்தது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12,000 கன அடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதனிடையே டெல்டா மாவட்டங்களில் பாசனத் தேவை குறைந்துள்ளதால் நீர்திறப்பு விநாடிக்கு 5,600 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதில் நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 5,000 கன அடி தண்ணீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளன. 

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து தற்போது குறைவாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 118.48 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 8 மணி அளவில் 118.62 அடியாக உயர்ந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து