முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தை மாத அமாவாசையையொட்டி 4 நாட்கள் சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி

புதன்கிழமை, 18 ஜனவரி 2023      ஆன்மிகம்
Chaturagiri 2023-01-18

Source: provided

சதுரகிரி : தை மாத அமாவாசையையொட்டி சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல ஜன.19 இன்று முதல் 22 வரை 4 நாள்கள் அனுமதி வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் வியாழக்கிழமை(ஜன.19) பிரதோஷமும், சனிக்கிழமை(ஜன.21) அமாவாசை வழிபாடும் நடைபெற உள்ளன. இதையொட்டி, ஜன.19 முதல் 22-ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல வனத் துறையினர் அனுமதி வழங்கினர்.

10 வயதுக்குள்பட்டோர், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மலையேற அனுமதி கிடையாது. கோயிலுக்கு வருபவர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பிறகே பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவர். கோயிலுக்கு வருபவர்கள் மலைகளில் உள்ள ஓடைகளில் குளிக்கக்கூடாது. கோயிலில் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை. அனுமதிக்கப்பட்ட நாள்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தாலோ பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

தை அமாவாசையையொட்டி, போக்குவரத்துக் கழகம் சார்பில் மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து