முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம் தொட்ட வசூல்

புதன்கிழமை, 18 ஜனவரி 2023      ஆன்மிகம்
Sabarimala 2022 12 18

Source: provided

திருவனந்தபுரம் : கடந்த 13-ந்தேதி முதல் தற்போது வரை தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கோவிலுக்கு வந்துள்ளதால் சபரிமலையில் இதுவரை இல்லாத அளவுக்கு உண்டியல் வசூல் உச்சம் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டதால் இந்த ஆண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். இதனால் நடை திறந்த நாள் முதல் கோவிலின் காணிக்கை வசூல் இதற்கு முந்தைய ஆண்டுகளை விட மிக அதிகமாக இருந்தது.

கடந்த 12-ந்தேதி வரை கோவிலின் வருவாய் சுமார் ரூ.310.40 கோடியாக இருந்தது. 13-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். இதுபோல காணிக்கை வசூலும் அதிகமாக இருந்தது. இதன்காரணமாக கோவில் வருவாய் ரூ.315.46 கோடியாக இருக்கும் என்று அதிகாரிகள் எதிர்ப்பார்க்கிறார்கள். இதுபோல உண்டியலில் போடப்பட்ட நாணயங்களை எண்ணுவது கோவில் ஊழியர்களுக்கு சவாலாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து