முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவீரா படப்பிடிப்பு தொடக்கம்

சனிக்கிழமை, 21 ஜனவரி 2023      சினிமா
Maveera 2023 01 21

Source: provided

சந்தன வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து 'சந்தனக்காடு' தொலைக்காட்சி தொடரை இயக்கியவர் இயக்குனர் கவுதமன். "கனவே கலையாதே" "மகிழ்ச்சி" திரைப்படங்களுக்கு பிறகு கதை, திரைக்கதை எழுதி இயக்கும் படத்திற்கு மாவீரா என்று பெயரிடப்பட்டிருக்கிறது. வி.கே புரடக்க்ஷன் தயாரிக்கும் இந்த படத்தில் வ.கௌதமன் நாயகனாக நடிக்கிறார் அவருடன் சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூரலிகான், சரண்யா பொன்வண்ணன், அஸ்வினி சந்திரசேகர், இளவரசு, ஆடுகளம் நரேன், கிங்ஸ்லி, "பாகுபலி" பிரபாகர், தமிழ் கௌதமன், தீனா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். வைரமுத்து வரிகளுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா கடலூர் மாவட்டத்திலுள்ள விஜயமாநகரம் முனீஸ்வரன் கோயிலில் நடைபெற்றது. படம் குறித்து இயக்குனர் வ.கௌதமன் கூறும் போது,  தமக்கு மேலானவர்கள் யாரும் இல்லை, கீழானவர்கள் யாரும் இல்லை என்ற சமத்துவத்தோடு எல்லா மக்களையும் சமமாக பாவித்து 'அத்துமீறி மீறினால் யுத்தம்' என்ற அடை மொழியோடு மண்ணையும் மானத்தையும் காத்த ஒரு மாவீரனின் வாழ்க்கை வரலாறுதான் இந்த மாவீரா படத்தின் கதை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து