முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.வி.பிரகாஷீடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்

சனிக்கிழமை, 21 ஜனவரி 2023      சினிமா
GV-Aishwarya 2023 01 21

Source: provided

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் தற்போது ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், இருவரும் ஃப்ரூட் பேக்காக மீண்டும் இணைந்து இருக்கிறார்கள். கேரளாவை சேர்ந்த பிரபல ஜூஸ் மற்றும் இனிப்பு விற்பனையாளர் சென்னையில் தனது முதல் விற்பனையகத்தை காதர் நவாஸ் கான் ரோட்டில் திறந்ததுள்ளார். தற்போது இரண்டாவது கிளையை பெசன்ட் நகரில் திறந்திருக்கிறார்கள். புது பொலிவுடன் இருக்கும் ஃப்ரூட் பே  கடையை ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் இணைந்து திறந்து வைத்திருக்கிறார்கள். அப்போது பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்,  ஃப்ரூட் பே - வில் இருக்கும் ஜூஸ் மற்றும் இதர உணவுகளுக்கு நான் அடிமை. கடையை திறந்து வைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து