முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது : ஆம் ஆத்மி கட்சி கருத்து

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2023      இந்தியா
AAP 2021 12-05

Source: provided

புதுடெல்லி : இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் என 3 வகைகளில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர அரசுகள் கவிழும் பட்சத்திலும், கட்சி தாவல்களாலும், வேட்பாளர்கள் மறைந்தாலும் இடைத்தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. 

பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களை நடத்தும் போது அவை நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் தேதியுடன் ஒத்துப்போவதில்லை. இவ்வாறு நடத்தப்படும் தேர்தல்களினால் அரசுக்கு ஏற்படும் செலவுகள் அதிகமாக உள்ள நிலையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. 

இதுதொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சட்ட ஆணையத்தை மத்திய சட்ட அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் இந்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பி தங்களது கருத்துகளை தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளது.

முன்னதாக இந்த திட்டத்திற்கு தி.மு.க. சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக சட்ட ஆணையத்தில் தி.மு.க. அளித்த கடிதத்தில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை காரணம் காட்டி ஒரு ஆட்சியை கலைக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பா.ஜ.க. தனது 'ஆபரேஷன் லோட்டஸ்' திட்டம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை வியாபாரம் செய்வதை சட்டப்பூர்வமாக்குவதற்கு இது ஒரு தந்திரம் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 

இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் அதிஷி கூறியதாவது;- 

"நாடாளுமன்ற ஆட்சி முறைக்கு பதிலாக ஜனாதிபதி முறையை கொண்டு வருவதற்காக இந்த திட்டத்தை பா.ஜ.க. முன்மொழிந்துள்ளது. இந்த தேர்தல் முறை அரசியலமைப்பு சட்டத்திற்கும், அடிப்படை ஜனநாயகத்திற்கும் எதிரானது. மக்களவை மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால், பணபலம் கொண்ட கட்சிகள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி மாநிலங்களின் பிரச்சினைகளை அடக்கி ஒடுக்கும், மேலும் வாக்காளர்களின் முடிவும் பாதிக்கப்படும். ஆம் ஆத்மி கட்சி தனது பதிலை சட்ட ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. சட்ட ஆணையம் அனைத்து கட்சிகளின் கருத்துக்களையும் பாரபட்சமற்ற முறையில் ஆய்வு செய்யும் என்று ஆம் ஆத்மி நம்புகிறது." இவ்வாறு ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் அதிஷி தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து