முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் புதிதாக 89 பேருக்கு கொரோனா

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2023      இந்தியா
Corona 2022-12-28

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 89- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,931 ஆக உள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 82 ஆயிரத்து 104- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 737 ஆக அதிகரித்துள்ளது.

தினசரி பாதிப்பு விகிதம் 0.06- சதவிகிதமாகவும் வாராந்திர பாதிப்பு விகிதம் 0.08 சதவிகிதமாக உள்ளது. கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவிகிதமாக உள்ளது. நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்னிக்கை 220.30 கோடியாக உள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து