முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத உணர்வுக்கு எதிராக பேச்சு: உ.பி. முதல்வருக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2023      இந்தியா
Supreme-Court 2021 07 19

Source: provided

லக்னோ : உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

ராஜஸ்தானின் மௌ மாவட்டத்தைச் சேர்ந்த கிஷோர் சர்மா என்பவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட யோகி ஆதித்யநாத், மத உணர்வுகளுக்கு எதிராகப் பேசினார். எனவே, அவர் மீது உரிய சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், விக்ரம் நாத் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுபோன்ற மனுக்கள் செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன என்று கூறி மனுவை நிராகரித்தனர். முன்னதாக, இந்த மனுவை அலாகாபாத் உயர்நீதிமன்றமும் நிராகரித்தது. அப்போது மனுதாரருக்கு ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இதற்கு முன்பு மாவட்ட நீதிமன்றமும் இந்த மனுவை நிராகரித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து