முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியரசு தினத்தின் நிறைவாக டெல்லியில் முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2023      இந்தியா
Delhi 2023 01 29

Source: provided

புதுடெல்லி : குடியரசு தினத்தின் நிறைவாக, டெல்லியில் நேற்று முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடந்தது. 

நாட்டின் 74-வது குடியரசு தின விழா கடந்த 26-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு, பல மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் ஊர்வலம் நடந்தன. 

இதைத் தொடர்ந்து, குடியரசு தின விழாவின் நிறைவாக முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி டெல்லி விஜய் சதுக்கத்தில் நேற்று நடந்தது. 

இதில், ஆயுதப் படைகளின் உச்சபட்ச தலைவரான ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார். அவருடன் பிரதமர் மோடி, பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். பாசறை திரும்பும் முப்படை வீரர்களும் 29 ராகங்களில் இசை வாத்தியங்களை இசைத்து அணிவகுத்து சென்றனர். 

முதல் முறையாக வடக்கு மற்றும் தெற்கு பிளாக் பகுதியின் முகப்பில் 3டி அனாமார்பிக் புரொஜக்‌ஷனுக்கு  (முப்பரிமாண பலகோண காட்சிப்படுத்துதல்) ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3,500 டிரோன்களுடன், நாட்டின் மிகப்பெரிய கண்கவர் டிரோன் ஷோவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து