முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலத்தில் எடப்பாடியுடன் ஜி.கே. வாசன் ஆலோசனை : அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2023      தமிழகம்
GK-Vasan 2023 01 20

Source: provided

சேலம் : சேலத்தில் எடப்பாடி பழனிசாமியுடன்  ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்தினார். அப்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று அவர் தெரிவித்தார். 

 ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில் தி.மு.க. கூட்டணி சார்பில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை ஓ. பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி என இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மேலும், இரு அணிகளும் தேர்தல் பணிக்குழுவை அறிவித்து தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இன்னும் இருதரப்பின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. 

இந்த நிலையில் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 

வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தி.மு.க. மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். வரும் தேர்தலில் நிச்சயம் மாற்றம் நிகழும். அ.தி.மு.க.வுடனான கூட்டணி தொடர்கிறது என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து